நல்லமனம் வாழ்க! -இந்துமகேஷ்.

முல்லை அமுதன்!
– இது தமிழ் இலக்கிய உலகம் அறிந்த – முக்கியமாக ஈழத்துப் படைப்புலகம் அதிலும் புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகம் – இப்போது நன்கறிந்த பெயர்.

தமது இலக்கிய எழுத்துப் பணிகளோடு கூடவே தம்மோடு பயணிக்கும் சக படைப்பாளர்களை கலைஞர்களை அரவணைத்து அவர்களது படைப்புக்களுக்கும் ஊக்கமளித்து தாய்மொழிக்கான தமது சேவைகளைச் செய்வதென்பது ஒரு சிலராலேயே சாத்தியமாகிறது.

அந்த வரிசையில் முன்னிடம் வகிக்கும் திரு முல்லை அமுதன் தொடரும் தமது அரும் பணிகளால்
தமிழ்க்கலை இலக்கிய வாதிகளின் மனங்களில் நிரந்தரமாக இடம்பிடித்திருக்கிறார்.

காற்றுவெளி இதழும், நெய்தல் கவிதை இதழும் , எழுத்தாளர் விபரத் திரட்டு, இலக்கியப் பூக்கள்
போன்ற ஆவண நூல்களும் அவரது அயராத இலக்கிய முயற்சிகளின் வெளிப்பாடே.

படைப்பிலக்கியத் துறையில் முகம்கொள்ளவேண்டிய பலவகையான இடர்களுக்கு மத்தியில்
தொடர்பணியாற்றுவதென்பது ஒரு பண்பட்ட இதயத்திற்கே சாத்தியமாகக் கூடியது.

திரு.முல்லை அமுதன் அவர்களின் அயரா முயற்சிகளைப் பாராட்டுவதோடு அவரது பணி சிறக்கவும்
நலமாக வளமாக பல்லாண்டு வாழவும் மனதார வாழ்த்துகிறேன்.
வாழ்த்துவோம்.