நான் இன்றி நீ உண்டு! கவிதை சுதாகரன் சுதர்சன்

நம் இருவருக்கும்
விழுந்த இந்த பொருத்தம்
பெரியோர் வாய் முகூர்த்தம்
ஊரவர் ஆசீர்வாதம்
அத்தனையும் சுமந்து
உன் கரம் பிடித்தேன்
சில நொடியில்
கரம் அறுந்து
மாங்கல்யம் வெறுத்து
நிறம் மாறி
எல்லாம் இருளாக்கியது
உன் சந்தேக தீ

உனக்காக வாழ
நான் வந்தால்
நீயின்றி நான் வாழ்வேன்
என்றாய்
உனக்காக ஒரு விதி
அமைத்து
சாலையில் வீடமைத்து
குடி புகுந்தாய்
வரும் ஆபத்தின்
வலிமை அறியாமல்

பெண்ணே உன்
கருவில் என்
இரத்தமும் கலந்திருக்கிறது
அந்த சிசுவிற்கு
தந்தையை முகம்
காட்டாவிடினும்
தந்தையில்லா பிள்ளையாக்கி
விடாதே
இன்று எனை குறை கூறும்
சமூகத்தில்
நாளை உன் பெயரும்
உச்சரிக்கப்படலாம்

வருத்தமில்லை எனக்கு
நான் இன்றி
நீ வாழ்வதால்

 

ஆக்கம் சுதாகரன் சுதர்சன்