எங்கிருந்தோ அழைக்கிறாய் _ என் ஆன்மாவை அழவைக்கிறாய்!கவிதை கவிக்குயில் சிவரமணி

ஆழ்மனத்தீயென உன் நினைப்பு
ஆட்சிசெய்கிறது உன் வனப்பு
காதலில்என் மனக்கொதிப்பு
காணாத போது இதயத்திற்கு தவிப்பு

எங்கே தான் போச்சு உன் பேச்சு
என் மனம் கலங்கியே தவிக்கலாச்சு
நீ இன்றி போனால் வாழ்வென்னாச்சு
வார்த்தையின்றி தவிக்கிறது என் மூச்சு

இது போல துன்பம் உனக்கில்லையா
இரக்கமின்றி போனது நீயா
சாவித்திரியாக மாறாது ஒருபடிமேல
உயிர் காத்து உயிர் கொடுத்த மறுதாயே!

மரணமும் தோற்றது உன்னாலே
மறுபடி பிறந்து வா காத்திருப்பேன்
மலரே மலரே நீயெங்கே
மங்கையுன் வாசம் இன்னும் புவிமேல!

காதலில் வந்த காரிகையே!
கைபிடிக்கமுன் காலன் கொண்டு போனானே!
இதயத்திற்கு கேட்கிறது உன் அழுகை,
எங்கிருந்தோ அழைக்கிறாய் என்
ஆன்மாவை அழவைக்கிறாய்.

ஆக்கம் கவிக்குயில் சிவரமணி