பெண் ஒடுக்குமுறை சார்ந்த ஒரு குறும்படம் துணை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி ஊப்பர்டால் நகரில் நடைபெற்ற வெற்றிமணி இதழின் பெண்கள் தின விழாவில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தன. அதில் ஒன்றாக இடம்பெற்ற குறும்படம் ஒன்று என் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைக்குள் ஆழப் புதைந்து கிடக்கும் பெண் ஒடுக்குமுறை சார்ந்த ஒரு விஷயத்திற்கு மாற்று சிந்தனையைக் கொண்டுவரும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு குறும்படம் அது.

இளம் வயதில் கணவனை இழந்த தனது தாயாருக்கு மகளே அவர் ஒரு திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்து மகிழும் வகையில் அமைந்த ஒரு குறும்படம்.
அதில் ஒரு காட்சி என் கவனத்தை ஈர்த்தது..
பழைய சிந்தனைகளைப் புறக்கணித்து மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நெற்றி நிறைய திருநீறு.. கையில் ஈவேரா பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூல்…
குரும்படத்தின் இயக்குனர் சபேசன் வி. . இயக்குனருக்கும் மேலும் இப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துகள்.

தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கலைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் இத்தகைய குறும்படங்கள் மென்மேலும் பல வெளிவர வேண்டும்