பொன்னான நேரம்.

கண்கள் கடுக்க
கணணி முன்னும்
கையடக்க தொலை பேசியில்
காலம் முழுவதும்
நகருது நாகரீக வாழ்வு..

வாய் வலிக்க
வட்சப்பிலும்
வயிறு காந்த
வைபரிலும் தினம்
தினம் வலிந்த தாக்குதல்..

முற்றிலும்
மறந்தவராய்
முகம் கழுவாமலே
முகநூலிலும் நேரம்
முடங்கிப் போனது.

ஆளுக்காள்
குத்தி முறிந்தாலும்
ஆகப்போவது ஏதுமில்லை.
பெரிசு முதல்
சிறிசு வரை எங்கும்
சீரழிவு தான்…

அடிச்சு விரட்டினாலும்
அகலாது இந்த
முகநூல் மோகம்
மோப்பம் பிடித்தே
வாழ்வு மோசமாச்சு.
மேகம் கலைந்தாலும்
சற்றிங் வேகம் தணியாது..

காலை வணக்கம்
மாலை வணக்கம்
போட்டே பொழுது போகுது.
வேலை வெட்டியேதுமின்றி
பொன்னான நேரம்
மண்ணாகிப் போகுது..

ஆக்கம் கவிஞர்தயாநிதி