***பொறுத்திரு வளர்கிறேன்***

கொட்டிச்சிந்தும் சோற்றுப்பருக்கையை
கொத்திப் பொறுக்கித் தின்று திரியும்
கொண்டைக் கோழி இனம் நாங்கள் .
கொட்டிக்கிடக்கும் பணமுள்ள சிலரும்
கோடீஸ்வரர் என்ற பெயருள்ள பலரும்
கொடுத்துத்தின்னும் நல்ல குணமாற்ற
கொடும்பாவிகளாக வாழ்கையில்.
கொட்டிலில் வாழும் குணவதி நீயோ
கோப்பையில் அன்னமிட்டு என்னை
கொண்டாடுகிறாயே, வாழ்க நீயம்மா .
கோழியாக வளர்ந்த பின்னே உங்கள்
கொண்டாட்டத்தில் நான் குழம்பாகிறேன்.
கொடுப்பதற்கு உள்ளது எம்முடல்மட்டுமே
கொஞ்சநாள் பொறுத்திரு வளர்க்கிறேன்.
தான நேசன்