மன்னாரில் எழுச்சியுடன் இடம்பெற்ற இந்து மாநாடு

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 08.10.2017 இடம்பெற்ற இந்துமாநாட்டில் கலந்து கொண்டு காலை அமர்வில் சிறப்புரை ஆற்றினேன்.
.
சர்வதேச இந்து இளைஞர் பேரவையும் மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் ஒன்றியமும் இணைந்து இவ்விழாவை ஒழுங்கமைத்திருந்தனர்.
.
நிகழ்வு மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் நகரின் முக்கிய இடங்களில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
.
மன்னார் பாலத்தில் இருந்து விழா மண்டபம் வரை திருமுறை பாராயணத்துடன் எழுச்சி ஊர்வலம் இடம்பெற்றது. திருமுறைகளை வவுனியா தேவாரஇசைமணி சண்முகராசா, யாழ்ப்பாணம் சைவப்புலவா் இராசையா ஸ்ரீதரன் ஒலிபெருக்கியில் இசைக்க கலந்து கொண்ட யாவரும் சத்தமிட்டுப் பாடினா்.

ஊா்வலத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வரையில் கலந்து கொண்டனர். இவர்கள் பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் நகரை வந்தடைந்திருந்தனர் என்பது விசேட அம்சம்.

விழா மண்டபம் நிறைந்திருந்ததால் அதற்கு ஒப்பாக அருகில் தகரக் கொட்டகையால் புதிய மண்டபம் அமைத்து அங்கு புரஜெக்டரின் உதவியால் உள்ளே இடம்பெற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர்.

மக்களை எழுச்சி பெற வைத்ததில் அறநெறிப்வ பாடசாலைகள்ண ஒன்றியத் தலைவா் வண.தர்மகுமாரக் குருக்கள் உள்ளிட்ட குழுவினரின் பங்கு பிரதானமானது.
.
லண்டனில் இருந்து இவ்விழாவிற்காக பலர் வருகை தந்திருந்தனர். சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் அமைப்பாளர் திரு கணேஸ்குமார் இவ்விழாவினை மன்னாரில் நிகழ்த்துவதில் முக்கிய பங்காற்றினார்.
.

லண்டன் அன்பர்கள் ஆதரவுடன் திரு கணேஸ்குமாரின் பங்களிப்பினாலேயே தமிழகப் பேச்சாளர் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களை இந்தியப் பண மதிப்பில் ஒரு லட்சம் ரூபா வழங்கி அழைத்து ஒரு மணி நேரம் விழாவில் பேச வைக்க முடிந்தது என ஆர்வலா்கள்  தெரிவித்தனா்.