மன்மதன் பாஸ்கி விருது கிடைக்கப்பெற்ற மகிழ்வும் அதுபற்றி பகிர்வும்

சிரியாவிக்கு flight அனுப்பிய பின் கனடா சென்றேன் கனடாவில் நிற்கிறேன் என எழுதவே பயமாக இருக்கு மக்களே. சரி இருக்கட்டும்.

பாரிஸ் வாழ் வட்டுக்கோட்டை மக்களால்
எனது திரைபட பயணத்தை முன்நிலைபடுத்தி
À gun à ring படத்திற்காக China ?? Shanghai Film Festival சென்றுவந்த பின்
எனக்கென பாரட்டுவிழா நடத்தி கெளவர விருதுகள்
வழங்கப்பட்டது. 2013

பாரிஸ் சலனம் அமைப்பால் 2014
ஈழத்து நடிகர் R. ரகுநாதன் ஐய்யா அவர்களின் பெயரில்
“ரகுநாதன் அறக்கட்டளை விருது” வழங்கப்பட்டது

பாரிஸ் TCC அமைப்பால் 2015
“ விடுதலையின் வேர்கள் “ விருது வழங்கப்பட்டது

சாதனைத்தமிழா சுவிஸ் 2016
எனக்கும் அங்கிளுக்கும் இரட்டையர்களுக்கான சாதனைத்தமிழா விருது வழங்கப்பட்டது

1. நான் முதலாவதாக இயக்கிய “நதி” குறும்படம் பாரிசை விட்டு முதல் வெளியே சென்று
5 விருது எடுத்த நாடு “ கனடா”

2. முதல்முதலாக நான் பாரிசை விட்டு வெளியே சென்று நடித்த முழுநீளத் திரைப்படம் “ A gun A gun “
நாடு “கனடா.”

3. எனது திரைப்பட கலைப்பயண வாழ்வை பாராட்டியும் வாழ்த்தியும் நான் நடித்த பிரெஞ்சு “le sens de la fête “ படத்தை முன்னிலை படுத்தியும் கனடா உதயன் பத்திரிகை சர்வதேச விருது விழாவில் எனக்கு விருது வழங்கப்பட்டிருக்கின்றது. 2018

எனது திரைப்படத்துறை சார்ந்த முக்கியமான முதல் மூன்று பயணங்களும் “ கனடாவில் அமைந்திருக்கின்றது “மகிழ்ச்சி.

என்னுடன் உறுதுணையாக இருக்கும்
எனது தோழமை அங்கிள்,எனது குடும்பம், நண்பர்கள்.
மற்றும் எனக்கு ஆதரவு கொடுக்கும் சக ஈழத்து
கலைஞர்கள் , ரசிகர்கள், தமிழ்நாட்டு கலைஞர்கள்,
வர்த்தகர்கள்,வானொலிகள்,தொலைக்காட்சிகள்.
என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறேன்.

கனடா மண்ணுக்கு அழைத்து மண்டபம் நிறைந்த மக்களுடன் கெளரவ விருது வழங்கிய உதயன் பத்திரிகைக்கும் எனது நன்றிளை
தெரிவித்துக்கொள்கிறேன்.

விருது கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியோடும்
உளமாரப் போற்றும் ரசிகர்களின் வாழ்தோடும் உள்ளம் பூரித்து மனம் மகிழ்ந்து நிற்கிறேன்.

நன்றி
மன்மதன் பாஸ்கி