மொழியோடு கலையால் கனிந்த இன்நாள் 13.4.2019.

நான் வாழும் பகுதியில் கடந்த ஏழுவருடங்களாக தமிழ்மொழியை கற்பதற்கு ஆலயமாக விளங்குவது “சூரிச் ஓபர்கிளாட் தமிழ்பள்ளி” ஆகும்.

13.4.19 அன்று இந்தப்பள்ளியின் முதலாவது கலைவிழாவினை நடாத்திமுடித்தோம்.

இந்த நாட்டில் பிறந்து வளர்ந்துவரும் எமது இரண்டாம் தலைமுறை தமது வாழ்வியல் நாட்டின் மொழிகளான ஜேர்மன்,ஆங்கிலம் ,பிரஞ்சு ,இத்தாலி ஆகிய மொழிகளை கற்கவேண்டிய கட்டாயச்சூழலில் தமது “தாய்மொழியை” கற்பதற்கு காட்டிவரும் ஆர்வமானது அவர்களின் பன்மொழிக்கற்றல் திறனை அடையாளப்படுத்துகிறது.

அத்துடன் தாய்மொழிக்கொடுக்கும் மதிப்பினையும் உணரமுடிகிறது.

தமது பிள்ளைகளுடன் ஒன்றித்து இயங்கும் பெற்றோரிர்களின் ஒத்துழைப்பும் இவையாவற்றுக்கும் மையக்கல்லா விளங்கும் தமிழ் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பணியகத்தின் வேலைத்திட்டங்களும் பாராட்டத்தக்கவையே…!

எங்கள் பள்ளியில் மொத்தமாக 32 மாணவர்களே கல்விகற்றுவருகின்றனர்.

மழலையர் பிரிவிலிருந்து 11 ஆம் வகுப்புவரையில் தமிழ்கற்கும் மாணவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து முற்பகல் 12:00 மணிவரை ஓபர்கிளாட் அரசபள்ளியில் தமிழ்கற்க வருகைதருகின்றனர்.

இவர்களுக்குள் இத்தனை திறமைகளா?
என்று ……
வியந்தோம் நாம்….!!

பறை ,கோலாட்டம்,உழவர் நடனம்,உரையாடல்,தனிக்கவிதை ,பேச்சு,குறள்மாலை,சிறுமிகளின் அபிநயநடனம் நாடகம் ,உரையாடல் ஒன்றா இரண்டா……

அத்தனையும் மேடையில் அரங்கேறி முடிந்த போது…”ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தாய்களாக” ஆசிரியைகள் நாம்.
திருமதி.இந்துமதி,
திருமதி.சிறிமதி,
திருமதி.மதிவதனி.
நடன ஆசிரியை.திருமதி .சுபா.

பள்ளி முதல்வர்,பெற்றோர் ,கல்விப்பணிமனை இனைப்பாளர்,சூரிச் மாநிலபொறுப்பாளர்,பியூளாக் பள்ளி முதல்வர் போன்றோரின் பாராட்டுப் பூமழையில் ஆசிரியைகள் நாமும் நனையத்தவறவில்லை.

இப்பள்ளியில் என்னிடம் பத்தாம் வகுப்பை கற்று முடித்து பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றுவரும் பழையமாணவிகளின் வருகையும் அவர்களினால் மாணவர்களுக்கு அன்புடன் வழங்கப்பட்ட நினைவுப் பரிசும் கண்கொள்ளாக்காட்சி.

வாழும் போது எமது தலைமுறைக்கு ஆயிரம் நல்லதை திணிக்க முயற்சிப்பதைவிட 
ஒரு நல்ல செயலையேனும் கற்றுகொடுப்போம்.

நன்றி .மதிவதனி(வாணமதி)