***வாழ்க்கைப் பயணம்***

உடைந்து போன நல்ல
உள்ளங்கள் மீண்டும்.
உறவாடிக் கொள்வதொன்றும்
உலக அதிசயம் இல்லையே.
*
தடையாய் இருந்து வந்த
தாழ்ப்பாரை விலக்கி வைத்து,
தாழ்மையாக எடுத்துரைத்தால்
தாமே இணைந்துவிடுமல்லவா .
*
உடைப்பெடுத்த இடத்தைத் தேடி,
உருப்படச் செய்து முறையாக,
உரையாடி நல்லுள்ளங்களை ,
உறவாடச்செய்தல் கடினமில்லையே .
*
கடைசிவரை சேர்ந்து வாழ்ந்திடவே
காலதிகாலமாக எம் பண்பாட்டில்
கலியாணம் எனும் உறவை
கடைப்பிடித்து வருகிறார்கள்.
*
இடை நடுவில் பிரிந்து சென்று
இல்லாளை தனித்து விட்டுவிட ,
இதுவொன்றும் நீ பயணிக்கும்,
இரயில் பயணம் அல்லவே.
*
மடை திறந்த வெள்ளம் போல
மனம் நிறைந்த அன்பு ஆசைகளை
மறைத்து வைத்து பொய் வேடமிட்டு
மனதை வீணாய் கொல்வதுமேனோ?
*
நடைபயின்ற கால்கள் இடைநடுவில்
நடைமறந்து வாழ்வதென்பது வாழ்வின்,
நடைமுறைக்கு ஒவ்வாது என்பர்.இந்த
நடை நன்கு புரிகிறதா நல்லுள்ளங்களே.
*
விடை கொடுத்துவிட்டு நீ தனியாகவே
விகுதி வாழ்வை வாழ்த்திடக் கூறி ,
வினோதம் பார்த்து ரசித்து சிரிக்கும்,
விருந்தாளி நடப்புகளை வெறுத்திடு.
*
படையணிபோல பெண்வீட்டின்
பராமரிப்பு கிடைத்தாலும்,இரவில்,
பக்கத்தில் உறங்கும் கணவனின்
பாதுகாப்பு போல வருமா.
*
சடையின் சிக்கலை அவிழ்த்து
சஞ்சலமின்றி முடித்து வைக்கும்
சாமானிய பெண்களுக்கு வாழ்வின்
சங்கடமுடிச்சை அவிழ்த்திட தெரியாதா .
**
சங்கட நேசன்