செந்தாமரை மலரென

தூக்கிய பாதம் செந்தாமரை மலரென
நாட்டிய முத்திரை ரதியின் நகலென
தேவதை வதனமோ நிலவின் ஒளியென
தேடியே வந்தவள் எந்தன் விழியென

அலைகளாக எண்ணங்கள் மனதினிலே உருளுதடி
ஆசைகள் கற்பனைகள் என்னுள்ளே தோன்றுதடி
ஆரவாரம் செய்தே அன்புக்காக கெஞ்சுதடி!

பட்டப் பகலடி பகலவன் உச்சத்தில்
பாவையை பார்த்ததும் கதிரவன் வெட்கத்தில்
எப்படி வந்தனை எந்தனின் பக்கத்தில்
உன்னிருக்கை நீல வானிலே உச்சத்தில்

புதிராக தோன்றியதும் புரிந்ததடி புன்னகையில்
பெண்ணிலவின் மதிமுகமே தந்த மயக்கத்தில்
பகலில் வெண்ணிலவாய் தோன்றிய தயக்கத்தில்
பேச்சிழந்த என் நிலையோ சுவர்க்கத்தில்!

ஈழத் தென்றல்