போர் தின்ற பிள்ளைகள்
போயின ஊர்கோலம்
மேல் வீழும் குண்டில்
துரோகங்கள் கொண்டு
யார் அழுதும் தீரா
அவலங்கள் சுமந்தோம்
ஏன் இன்று அதை நாம்
மறந்துமே தொலைத்தோம்
போர் தின்னும் போது
வாழ்வு கசக்கவில்லை
தடமும் சருக்கவில்லை
மேவும் இரவுகளில்
பயமும் இருக்கவில்லை
ஏன் இன்று அதை நாம்
மறந்துமே தொலைத்தோம்
இன் சொல்லும் மறந்தோம்
வன் இரவு புகுந்து
ஆதிக்கம் செலுத்துகின்றதே
வல்லூரு கூட்டம் வட்டமிட்டு
செல்கின்றதே எல்லாம் நாம் தான்
யாரிடம் உரைப்பது
எல்லா துரோகமும் நம்மிடம் உள்ளதே

****************
தே.பிரியன்