அனுபவங்களின் உண்மை நிலை


இன்று வடக்கு தமிழ் மாணவர்களின் மன நிலை கல்வி நிலையில் என்னால் அவதானிக்கப்பட்டவையை உங்களிடம் பகிர்கிறேன். இலங்கை பாடசாலை பாடத்திட்டமானது தமிழ் சிங்கள மாணவர்களுக்கு ஒன்றானதாகும் மாெழி மட்டும் மாறு படுகின்றது . ஆனால் சிங்கள மாணவர்களின் இன்றய கல்வி கலை வளர்சிக்கு எமது மாணவர்கள் இரண்டாம் நிலையில்தான் உள்ளனர் . சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் வசதியாக உள்ளனர் . ஆனால் கல்வி கலை வளர்சியில் ஏன் இவர்களால் முன்னிலை வகிக்கமுடியவில்லை .? இது மாணவர்களின் அக்கறைஇன்மையா அல்லது பெற்றாேருரின் சரியான வழிகாட்டுதல் இல்லையா ? அல்லது ஆசிரியர்களின் சரியான கற்பித்தல் இல்லையா? காெண்டாட்டங்களுக்கும் பண்டிகைக்கும் அதிக ஆடம்பரமான உடை உடுத்தி அழகு பார்க்கும் எம்மவர்கள் கல்வி கலை வளர்ச்சிகளுக்கு செலவழிப்பதில்லை பருவமானால் கடன்பட்டு ஒரு சாமத்திய வீட்டுக்காெண்டாட்டம் இப்படி வாழும் எம்மவர்கள் ஏன் எமது பண்பாட்டு கலை விழுமியங்களுக்கு துணையாக இல்லை என்பது கவலையான விடயமாகும் ஓடி ஓடி மாறி மாறி எல்லா இடத்திலும் உள்ள ஆசிரியர்களின் பறந்து பறந்து பாேவார்கள் ஆனால் இடை யில் காணமல் பாேய்விடுவார்கள் . இன்று எனது வகுப்பில் சிங்கள மாணவர்களின் பங்களிப்பு ஆர்வம் அர்ப்பணிப்பு செயற்பாடுகளை பார்க்கிற பாேது எமது மாணவர்கள் மிகவும் பின்தங்கிய பாேக்கில் காணப்படுவதால் எதிர்காலத்தை நினைத்து அச்சமாக உள்ளது
படத்தில் உள்ளவர் கசினி காவிந்திய சிங்கள மாணவி . படப்பிடிப்பு பிரியந்தன்