ஆறுமுகம் விஜயன்.பற்றி கவிஞர் தயாநிதி

ஆறுமுகம் விஜயன்.
நெதர்ரலாந்த்
தாயகப் பாடகர்.
………………………………..
இவர் யாழ் கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.தனது இளமைக் காலக் கல்வியை கோப்பாய் மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தவர்.இவரது பாட்டனார் சிறந்த இசை வித்தகராவார். அவரது வழித் தோன்றலில் விஜயனும் சிறு வயதிலிருந்தே பாடும் திறன் கொண்டதனால் ஊரில் வாழ்ந்த காலங்களில் எங்கள் மாவீரச் செல்வங்களின் நினைவு நாட்களில் அரங்கேறிப் பாடி தன் பற்றினை வெளிப்படுத்த தவறவில்லை.
சிறு வயதிலேயே எல்லோரது பாராட்டுக்களையும் பெற்று ஒங்கி வளரும் போது இராணுவக் கெடு பிடிகளினால் புலம் பெயர்ந்து நெதர்லாந்து நாட்டை வந்தடைந்தார்.
தாயகத்தில் கண்முன்னே கண்டு அனுபவித்த அனைத்து அவலங்களின் கோர நினைவுகளால் உந்தப்பட்ட விஜயன் இங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களோடு இணைந்து பல முன்னெடுப்புக்களில் ஈடுபாடுடையவராக தன்னை மாற்றிக் கொண்டார்.
மாவீரர் அரங்குகளிலே பாடுவதையும் வளர்த்துக் கொண்ட விஜயன் தமிமுத இசைக்குழுவின் இசை அமைப்பாளர் திரு.இரா சேகரின் இசை அமைப்பில் நாம் தவழ்ந்த மண்.புதிய பரணி போன்ற இறுவெட்டுக்களிலும் பாடி இருப்பது மிகச் சிறப்பு.
இசைக் குடும்ப பின்னனியில இருந்து் வந்த விஜயனால் தானுண்டு தன் பாடுண்டு என அமைதியாக இருந்து விட முடியவில்லை. தனது மகளை நடன ஆசிரியை ஜெயந்தி யோகராஜாவின் நடனப் பள்ளியில் இணைத்து இன்று ஒர் தலை சிறந்த நடன ஆசரியையாக உருவாக்கியுள்ளார். கூடவே இவரது மகன் சிறந்த சொல்லிசைப் பாடகராக கொலண்ட் அரங்குகளிலே மின்னி வருவது கண்கூடு.
விஜயன் பல அரங்குகளிலே பாடும் தருணங்களிலெல்லாம் தென்னிந்திய பிரபல இசை அமைப்பாளர்கள்.அன்பு அறிவிப்பாளர் b.h.அப்துல் கமீட் அவர்களின் பிரத்தியோகப் பாராட்டுக்களைப் பெற்றதையும் நன்றியோடு பகிர்ந்து கொணடார். திறன் அனைத்தும் பொருந்தியவரும் அழகான பண்பட்ட குரலுக்குச் சொந்தமானவருமான விஜயன் பல அரங்குகள் காணவேண்டும் மேலும் பல இசை அமைப்பளர்களுடன் இணைந்து பணியாற்றி சிறக்க வேண்டுமென வாழ்த்துவோம் வாருங்கள். வாழிய வாழியவே…