எங்கனம்..?

இப்படித்தான்
மண்ணும்
மரங்களும்
வயல்களும்
வனப்பாயிருந்தது..

மனங்களும்
மனித நேயங்களும்
குளங்களும்
குட்டைகளும்
குளிர்ச்சியாகவே..

குணங்களும்
கொள்கைகளும்
இரங்கலும்
ஈதலும் இறை
நேசமும்என்றும்
தாராளமாகவே..

எப்படித்தான்
கடந்தோம்
மறந்தோம்
இருந்தவற்றையும்
இழந்தோம்…

போர்
தின்றது பாதி
நீர் தின்றதும்
துரோகம் கொன்றதும்
மீதியென
எல்லாம் தொலைந்ததுவே..

பார்
எங்கனும்
படர்ந்த வாழ்க்கை
ஊர்
எங்கனும்
உல்லாச பயணங்கள்..

உறவுகள்
மறந்ததும்
உணர்வுகள்
மரத்ததும்
உண்மைகள்
ஒழிந்ததும்
எங்கனம்?
விழிப்போமா….!

 

கவிஞர் தயாநிதி