ஒரு துளி…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விழி நீரின்
வடிதலுக்கு
பழி நீயல்லா…
விளக்கமில்லா
விதைப்பின்
அறுவடையாகும்..
சுழியோடி
முத்தெடுப்பவனே
ஆழமறிவான்.
வலிக்காமல்
வாழ்க்கை
எவருக்குமில்லை..
காதலும்
கனிந்தால்
புது மொழி..
பக்குவமாகவே
கையாண்டால்
கனி மொழி..
இலக்கண
சுத்தம் தாண்டி
இலட்சிய தாகம் வேண்டும்..
நேசிப்பு
வாசிப்பை
விஞ்சியதாகனும்..
யாசித்து
வருவதல்ல
நிதானித்து பெறனும்…
காரணமில்லா
மௌன மொழி
ரணமாக்கும்…
மனமதை
ஊனமாக்கி
சேதமாக்கும்..
கண்ணீரும்
கூடு கட்டி
குளமாகும்..
வாழ்வுக்கு
நிலையில்லை
ஆனாலும் விலையுண்டு…

கவிஞர்ரி.தயாநிதி