ஒரு மாபெரும் கலைஞர் எம்.எம்.எ லத்தீப்

……..கலைச்செல்வன்…
இஸ்லாமிய மதத்தவராக இருந்தாலும் மொழியால்
கலையால் ஐம்பது ஆண்டுகள் நட்பில் இருக்கின்றோம்.நான் கொழும்பில் இருக்கும் போது அவர் நடித்த நாடகங்களை பார்க்க தவறியதில்லை.அவரும் அப்படியே.நாடகம் முடிந்ததும் ஒப்பனை அறைக்கு வந்து வாழ்த்து சொல்லி செல்லும் அன்பான கலைஞன்..
அண்மையில் கொழும்பில் ஒரு மேடையில் என் கையால் பரிசு வழங்க விழா ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்தனர்.. இருவரும் பெருமைப்பட்டோம்.. இதே விழாவில் மற்றொரு கலைஞர் நண்பர் எம்.எம்.எ லத்தீப்பையும் கண்டேன்
இவர் நான் உங்கள் தோழன் திரைப்பட வில்லன்..
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் எனது படம் ..இது காலம்.
கொழும்பு லிடோ திரையரங்கில் தணிக்கை காட்சிக்கு மற்றொரு ஊடக நண்பர் நடராசா ராமலிங்கத்துடன் வந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து செய்தியாகவும் பத்திரிகையில் பிரசுரித்தார்…மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பனே..நீ நீடூழி வாழ்க

குணபதி கந்தசாமி