கேள்விக்குறியான மனித நேயம்

எல்லோருக்கும் பொதுவான இறைவனே!….இன்று உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.. மனிதர்களிடையே மனிதநேயமே இல்லாமல் போய்விட்டதே….
புலால் புசிக்கும் புலிக்கு கூட இருக்கும் இரக்கமும்,கருணையும்
இன்று மக்களிடையே இல்லையே…
காணொளியில் எத்தனையோ
ஐந்தறிவு கொண்ட விலங்குகளின்
அரிய காட்சிகளை பார்க்கமுடிகிறது
ஆனால் ஆறறிவு படைத்த மனிதனோ,
தனது மக்களையே வெட்டிக்கொல்வதையும், மண்ணுக்குள் தலைதெரிய மட்டும் புதைத்துவிட்டு ,பின் பலர் சுற்றிநின்று கல்லால் எறிந்து கொல்வதையும் காணொளியில் பார்த்து கண்கள்
கலங்கி,நெஞ்சு பதைபதைத்து நிற்க வேண்டி இருக்கிறது…
எத்தனை கடவுள்கள் இந்த உலகத்தில்..? அத்தனை பேரும் கல் நெஞ்சமுள்ளவர்களா? ஏன் இந்த கொடுமை? வேண்டாமே…
அண்மைக் காலங்களில் பல இடங்களில்
மதம் மாற்றும் முயற்சிகளும் அது முடியாவிட்டால்
பிறமதத்தினரை அடித்து,வெட்டிக் கொல்லும்
சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருகின்றன.
இந்த மனித இனம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றது
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்றால் மக்களுக்கு
மனிதாபிமானம் வர அருள் கொடுக்கட்டும்….அவர்கள்
பாவத்தில் விழும்போதெல்லாம் மனம் வருந்தி திருந்தட்டும்…
பிறரின் துன்பத்தையும்,பாரத்தையும் உணரட்டும்..
தேவையில் இருப்போருக்கு பரிவு காட்டட்டும்…
வருந்துவோரிடம் கரிசனை காட்டட்டும்….
குற்றச்சாட்டுகள் மத்தியில் அமைதி காக்கட்டும்….
பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்கட்டும்…
தங்கள் வார்த்தையிலும்,செய்கையிலும் உண்மை பேணட்டும்…
எல்லாவற்றிலும் இறுதிவரை உறுதியாக இருக்கட்டும்…
மனித நேயத்தை இந்த மண்ணிலே காக்கட்டும்.

 

-கோவிலூர் செல்வராஜன்-