கொடியானவளே உந்தன்  கொடியிடையால் , எனைக்கொல்லும் கொடியவளே .

நெஞ்சமதில் நீ குடிபுகுந்த நாள் முதலாய்,
நி்தமும் உனக்காய் எங்குதென் மஞ்சமடி.
மஞ்சமதில் நீயில்லாத இரவுகளிளெல்லாம்
மாய்ந்து போகிறது எந்தனது நெஞ்சமடி.
கொஞ்சம் மனமிழகி நீயும் உந்தனெழில்,
கடைக்கண் பார்வையை என்மீது வீசிட
லஞ்சமாக தருகிறேன் என் ,உயிரையே நானடி~
லாவகமாக நீயும் ஒருமுறை, எனை அணைத்துக் கொள்ளாயோ.
தஞ்சம் புகுந்திட்டேன் உன்னிடத்தில் தானடி
தரணியில் நீயின்றி தனிவாழக்கை ஏனடி.
கொஞ்சுமடி உந்தனது கோபப்பார்வை கூட சிலநொடி ,
கொத்தித் தின்னும் அது தினம் , என்னுயிரைக் காயம் படாமலே
விரக நேசன்