சுவிசில் பத்தாவது அமுதமாலை

சுவிஸ் லீஸ்ரால் அமுதசுரபி தமிழர் ஒன்றியம் நடாத்திய அமுதமாலை நிகழ்வு கடந்த மாதம் லீஸ்ரால் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி, இசை நிகழ்ச்சி, நடனம், பேச்சு ஆகிய நிகழ்ச்சிகளுடன் ‘புலமும் நிலமும் நெருங்கி வருகிறதா? விலகிச் செல்கிறதா?’ என்ற தலைப்பிலான பட்டி மன்றமும் இடம்பெற்றது. திருநாவுக்கரசு சிறிதரன் தலைமையில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் ‘ சுவிஸ் சுரேஷ் , சண் தவராஜா மற்றும் ‘கவிதாயினி’ சிவதர்சினி, கார்த்திகா, மூர்த்தி மாஸ்ரர், நிமலன் அரியபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்தாவது தடவையாக நடைபெற்ற நிகழ்வில் உணவு விற்பனை மூலம் பெறப்பட்ட நிதி உட்பட அங்கத்தவர்களிடம் இருந்து அறவிடப்படும் நிதி யாவும் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளின் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காகச் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது