தடாகம் பன்னாட்டு படைவிழா – 2018

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு எதிர்வரும் 2018/08/18 அன்று தனது 36 வது வயதில் காலடி வைக்கின்றது இன்ஷா அல்லாஹ்!
இவ் விழாவில் (கொழும்பில்) நடைபெறவுள்ளது.
„கவினுறு கலைகள் வளர்ப்போம்“ எனும் உயர்வான இலட்சியத்தோடு – தமிழ் பேசும் உள்ளங்களை (பன்முக ஆற்றல் கொண்டவர்களை) இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கௌரவித்து வருக்கின்றது.
மெய்யான ஆத்மார்த்த தொனிப்புடன், மனித பீதி கடந்த இறையச்சமுடன், ஈமானிய பக்தியுடன், மானிடப் பிறப்பின் யதார்த்தம் உணர்ந்த உளத்தெளிவுடன் செயற்பட்டு வருகின்றேன்.
சந்திரனைச் சுற்றி பல நூறு நட்சத்திரங்கள் பிரகாசிப்பது போல் என்னைச் சுற்றி பல நூறு நல்லிதயங்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள் என்னை மறைய விடாது வெளிச்சம் காட்டிக்கொண்டு என்னுளத்து வானில் பிரகாசிக்கின்றார்கள்.
அவர்களை “நன்றி” என்ற சொல்லில் அறியப்படுத்த நான் விரும்புவதில்லை. காரணம் – என் மூச்சுக்களில் சுவாசமாக அவர்கள் இருப்பதால் .
காற்றினைப் பிடிக்கமுடியாது அல்லவா? தடவிக்கொண்டிருக்கின்றேன் எழுத்துக்களை தென்றலாய் மாற்றி…
ஒரு பெண்ணாக இருந்து கடந்து வந்த காலங்களை நான் நினைத்துப் பார்க்கத் தவறுவதில்லை
போட்டி – .பொறாமை – கோபம், ஆணவம் – அகங்காரம் – சூதுவாது – அவதூறு… இப்படி இப்படி பல பின்தொடர்ந்து … அவைகள் போர்வைகளாய் என்னை போர்த்திக்கொண்டது. முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் பேசப்பட்டது
இவைகள் எல்லாவற்றையும் தாண்டித்தான் நான் நேர்மைத்திறனுடன் , நெஞ்சத்தில் உறுதியுடன் . வஞ்சமிக்கோர் செயல்கண்டு அஞ்சாது
அல்லாஹ்வின் துணையால் இத்தனை ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்!
இந்த விழாவில் பல ஆற்றல் கொண்டவர்களை நாம் கௌரவிக்கின்றோம்.
அதற்காக நாம் இவ் விழாவை வியாபார நோக்கமாக பயன்படுத்தவில்லை. இதற்கு முன்னும் நாம் பயன்படுத்தியதும் இல்லை. இனிமேல் பயன் படுத்தப்போவதுமில்லை.
அதனால், நாம் யாருடைய கட்டுக் கதைகளுக்கும், பேச்சுக்களுக்கும் பயப்படப்போவதில்லை அல்லாஹ்வைத் தவிர
.
யாருக்கும் தலை குனிந்து நடக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை
. எமது சொந்தப்பணத்தில் இருந்து ஆற்றல் மிக்கவர்களை இனம் கண்டு விருது கொடுத்து கௌரவிக்கின்றோம்
. இந்த நிலையில் நாம் ஏன் யாருக்கும் பயப்படவேண்டும்? பகடைக்காய்களுக்கு பதிலளிக்க வேண்டும்?
திறமையானவர்களிடம் பணம் பெற்று ஏன் அவர்களுக்கு பணம் கொடுத்து கௌரவிக்க வேண்டும்?
தடாகம் திறமையானவர்களைக் கண்டு பணம் பெறாது கௌரவிக்கும் ஓர் அமைப்பாகும். அதனால் நாங்கள் மற்றவர்களின் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த விழாவில் விருதுபெறும் அன்பான உறவுகள் உங்கள் வருகையை எமக்கு உறுதிப்படுத்துங்கள்.
அவ்வாறு வர முடியாதவர்கள் (உறுதிப்படுத்த முடியாதவர்கள் ) இருப்பின் அவர்களுக்குப் பதிலாக விழாவுக்கு வர முடியுமானவர்களை சேர்த்துக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே 2018/07/25 ஆம் திகதிக்கு முன் தங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள்.
நன்றி.
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு