பவளவிழா நாயகன் கலைஞர் அப்புக்குட்டி இராஜகோபால் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.10.2017

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர்அப்புக்குட்டி இராஜகோபால் அவர்கள் நடிகரா சிறந்து விளங்கிய ஆசான் இவர் பல நாடகங்களில் தனகென தனித்துவம்கொண்டு விளங்கியவர் இவர் ஈழத்தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற பவளவிழா நாயகனினாக இன்று தனது பவளவிழாவை உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . பவளவிழா நாயகனை

கலைஞராக திகழ்ந்து முதிர்ந்து நிற்கும்
நீங்கள் பவளவிழா நாயகனாய்
இன்று நிற்கும் இவ்வேளை
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்

ஈழக்கலைஉலகம் தவிர்த்துவிட்டு செல்ல முடியாத பெயர் அப்புக்குட்டி. இராஜகோபால் எனும் அவரது இயற்பெயர் மறைந்து பாத்திரப்பெயரான அப்புக்குட்டி நிலைக்குமளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர்.

பல்திறன் மிகு பல்சுவை கலைஞரான அவர் ஈழத்து வழக்கு மொழிநடையை உலகப்பரப்பெங்கும் கொண்டு சென்றோரில் முக்கியமானவர் என்றால் மிகையாகாது.

வானொலி நாடகங்களூடாய் 70 க்கு பின்னரான கால கட்டங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் அந்தந்த வீட்டின் குடும்ப உறுப்பினர் அல்லது அயலவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர்.

இவர்களின் நிகழ்வுகளை கேட்க முடியா சூழ்நிலையை போர்க்காலமும் புலப்பெயர்வுகளும் தந்திருந்தாலும் இவர் பற்றி பெருமையோடு பேசிக்கொள்ளும் மூத்த தலைமுறையினரூடாக அறிந்தோம்.நேசம்மிகு கலைஞர் அப்புக்குட்டி இரஜகோபால் அவர்கள்

ஈழத்தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற பவளவிழா நாயகனின் ஆசிபெற்று வாழ்த்துகின்றோம்.