பாட்டி சொன்ன கதை!கவிதை சுபாரஞ்சன்

ஆளைக்கொல்லும்
பனிக்கால இரவின் கருமையில் பளீரென ஜொலிக்கிறது
திரண்டபனி

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும்
நினைவுகளை
சிறைப்பிடிக்க முடியா
சின்னஞ்சிறிய யன்னல்
பனிக்காற்றோடு
பறக்கவிடுகிறது

பறந்த நினைவுகள்
கனவுப் பாட்டியோடு
பேசிக் கொள்கிறது

போர் கொண்ட வேகத்தால்
புதையுண்ட வரலாறுகளும்
பறவைகளின் காதலும்
மனிதர்களின் உழைப்பு
மரங்களின் துளிர்ப்பு
மலர்களின் சிரிப்பு

எல்லாமே வெண்பனிக்குள்
புதையுண்ட ஞானம் என
வெள்ளைப்பாட்டி சொல்லும் கதை
விறுவிறுப்பாகவே இருக்கிறது

என் பால்யமோ
நிலவுப்பாட்டியிடம் கேட்ட கதையை
மீட்டிக்கொண்டது

சுபாரஞ்சன்