மன்னிப்பாயா..

மடியிருத்தி
மனதில்
குடியிருத்தி
பிடிப்போடு
அமுதூட்டி
ஆளாக்கினாய்..

பேரிட்டு
பசியோடு
போரிட்டு
ஊருக்குள்
நான் நிமிர
ஓடாய் தேய்தாயே..

ஏடெடுத்து
நான் படிக்க
நீ பட்ட பாடுகள்
வயலோடும்
வரம்போடும்
நெருப்போடும்
மாய்ந்தாயே….

நொந்தும்
தினம்
வெந்தும்
உயிர் காக்க
பயந்தும்
பள்ளிக் கூடமனுப்பி
பட்டம் பெற
வைத்தாயே…

எல்லாமுன்
எண்ணப்படி
நானுயர
ஏணிப்படியாய்
நின்றவளே
உனைத் தாங்கி
தினம் வாழ
வழியின்றி
போனேனே…மன்னிப்பாயா…