யாழ்.பல்கலையில் மணிவாகத்தின் நூல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஊடகக் கழகம் ஒழுங்கமைத்த  மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகத்தின் ‘நினைவுகள், நிகழ்வுகள், நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்’  நூல் அறிமுக நிகழ்வு கடந்த 14ஆம் திகதியன்று பிற்பகல் 3.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வினை ஊடகக் கழகத்தின் சிரேஷ்ட பொருளாளர் விரிவுரையாளர் டினேஸ் கொடுதோர் தலைமையேற்று நடத்தினார். கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகத்தின் ஊடக வாழ்க்கைப் பயணம் தொடர்பில் உரையாற்றினார்.  அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் ‘நினைவுகள், நிகழ்வுகள், நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்’ நூலை அறிமுகம் செய்து, மறைந்த  சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகத்தின் அரசியல் ஒழுக்கம் தொடர்பில் உரையாற்றினார். 

தினக்குரல் வார இதழின் முன்னாள் ஆசிரியர் பாரதி ராஜநாயகம் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா ஆகியோரும் பி.மணிக்கவாசகத்தின் ஊடகப்பணிகள் தொடர்பில் உரையாற்றினர்.   இறுதியாக, நிகழ்வின்  ஏற்பாட்டாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் திருமதி மாணிக்கவாசகம் நன்றி தெரிவித்ததோடு, பி.மாணிக்கவாசகம் எழுதிய நூல்களின் தொகுப்புகளை யாழ்.பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கும் ஊடகக் கற்கைகள் துறை நூலகத்திற்கும் வழங்கினார்.  இறுதியாக, நன்றியுரையை ஊடகக் கழகத்தின் செயலாளர் ஆர்.தர்ஷினி வழங்கினார்.

ஊடகக் கற்கைகள்  துறை விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகத்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊடகக் கற்கைகள் மற்றும் அரசறிவியல் துறை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert