யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் (5)வது ஆண்டு ஒன்று கூடல்05.10.19


S

வடமாகாணத்தில் சிறந்த பட்டதாரிகளைத்தந்த பாடசாலைகளில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா சிறப்புற்ற பாடசாலையாக அன்றும் இன்றும் மாணவர்களை பயிற்றுவிக்கும் பாடசாலையாக செயலாற்றி வருகிறது

அங்கே புத்துார், சிறுப்பிட்டி,ஆவரங்கால், அச்சுவேலி, நவற்கிரி, நீர்வேலி என்று பல அண்மித்த நகரப்பிள்ளைகளும் சிறப்புற அன்று கல்விகற்று இன்று பழையமாணவர்களாகத்திகழ்கின்றனர்,

இன்று புதிய தலைமுறையினரும் கற்கவும் நற்திறன் உள்ள பாடசாலை என இன்றும் புகழ் ஓங்கி நிற்கும் இந்தப்பாடசாலையானது புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா அன்று இருந்த அதிபர்கள், ஆசிரியர்கள் உழைப்பே இதன் புகழ் சிறக்க காரணம்,

அவர்கள் ஆற்றலால் சிறந்து விளங்கும் மாணவர்கள் பல புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றார்கள், அந்த ஞாபகத்தால் அதன் பழைய மாணவர் சங்கங்கள் அமைத்துள்ளனர்,

அந்த வரிசையில் பல முயற்சிகளின் பின் யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர் ஒன்று கூடல்(31.10.15) இடம் பெறது நீங்கள் அறிந்ததே அதுபோல் இரண்டாவது ஆண்டுக்கான  ஒன்று கூடலும் 2016 சிறப்பாக நடந்தேறியது

இந்த ஆண்டு அதாவது05.10.19 சிறப்பாக இன்னும் பலர் இணைந்து கொண்டுள்ளதுடன் விழாவுக்கான  அல்லது  பழையமாணவர் இணைக்கான ஏற்பாடுகள் மிகத்துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது இதில் பழையமாணவர்கள் யேர்மனியில் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் இந்த ஒன்று கூடலுக்காக இணையுமாறு பழையமாணவர்கள் கேட்டுக்கொள்கிறீர்கள்

அத்தோடு கலைத்திறன் உள்ளவர்கள் உங்களால் நிகழ்வுகள் தரமுடிந்தாலும் முன்கூட்டி அறியத்தரவும்  உங்களால் முடியாத பட்சத்தில் உங்கள் பிள்ளைகளிடம் கலைத்திறன் இருப்பின் அவர்களை இணைக்க முற்கூட்டிய தகவல்கள் கீழ் உள்ள தொடர்பு எண்களுக்குரியர்களிடம் அறியத்தரவும்

இந்த ஆண்டும் வளமைபோல எமது சென்ற ஆண்டுகளில் முன்னெடுப்பினால்  நடந்த விடயங்கள்அறிக்கையின்பார்வை  இனி முன்னெடுக்க இருக்கும் விடையங்கள் அனைத்தின் கலந்துரையாடல்  கலை நிகழ்வுகள்   புதிய இணைவாளர்களின்  அறிமுகங்கள், என எம்மை நாம் எமக்குள் ஒன்றிணைக்க நல்ல தருணமிது,. அதனால் அனைவரும் ஒன்றிணைவோம்,.

இணைவோம் அதுவே பலம்

மகிழ்வோம் அதுநலம்

நாம் மட்டும் இன்புற்று இருக்காது

நாம்கற்றதனால் என்ன பயன்

சிந்திப்போம் ஒன்று பட்டு கரம் இணைத்து

ஒற்றுமையின் கருவை உணர்ந்து

இணைந்து கூடி இருக்கும் இனிய நாள் வாரீர்இணைவோம் வளம்கொண்டு பழைய மாணவராய்,

புதிய நோக்கில்

புதுமை மலர என்று

அன்புடன் அழைக்கிறோம் உங்களில் ஒருவராய் ஒழுங்கமைபுக்குழு. இந்த இணைவில் வந்து கலந்து கொள்ள இருப்பவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொ டர்பு கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

அதனால் ஒழுங்கமைப்பு செய்வதற்கு மிக்க உதவியாய் இருக்கும் அன்புடன் உங்களில் ஒருவராய் ஒழுங்கமைபுக்குழு.

தொடர்புக்கு பழையமாணவர்கள்
அருனகிரிநாதன் 05452-3203
ரத்தின தவம் 0251-2017300
சரவணபவான் 0251-518147
சடகோபால் 0704143724
சுகுமாரன் 08972630729
றமேஸ் 02204-480469
வைத்தியநாதன் 05459-5289
புவனேஸ்வரன் 040-7151205
தவபாலன் (பாபு) 06150545984
நகுலா சிவநாதன் 02592/24553
கருணாமூர்தி 030 54493337
ஸ்ரீகந்தவேள் 0233380516 கை பே சி 015202153254

ஒன்று கூடல் இடம் பெறும் மண்டபம்  Beuthstr  21    44147 Dortmund

நிகழ்வுகள் சரியாக 4.00 மணிக்கு ஆரம்பமாகும்