யேர்மனி புத்துார் ஒன்றிய நிர்வக கூட்டம் 10.02.2019 டோட்முண்ட் நகரில் இடம்பெற்றது

வட மாகாணத்தில் சிறந்த பட்டதாரிகளைத்தந்த பாடசாலைகளில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா சிறப்புற்ற பாடசாலையாக அன்றும் இன்றும் மாணவர்களை பயிற்றுவிக்கும் பாடசாலையாக செயலாற்றி வருகிறது.அங்கே புத்துார், சிறுப்பிட்டி,ஆவரங்கால், அச்சுவேலி, நவற்கிரி, நீர்வேலி,கோப்பாய், இருபாலை, கட்டுவன், புன்னாலை கட்டுவன்,மட்டுவில் என சிறப்புற,அன்று கல்விகற்று இன்று பழையமாணவர்களாகத்  திகழ்கின்றனர், இன்று புதிய தலைமுறையினரும் கற்கவும் நற்திறன் உள்ள பாடசாலை என இன்றும் புகழ் கொண்டு உள்ளது.

இன்றைய நிர்வாகக் கூட்டமானது யேர்மனி டோட்மூண்ட் நகரில் 15 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது,18 மணிவரை கலந்துரையாடப்பட்டது.கடந்த சிலவருடமாக தன்பணியாற்றி வரும் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழையமாணவர்கள் ஒன்றிய நிர்வக யேர்மன்கிளை சென்ற ஆண்டு செயல் பாட்டு மேற்பார்வையுடன் புதிதாக எடுத்து செல்லவேண்டிய பணிகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன்,இந்த ஆண்டு அனைவரும் ஒன்று கூடும் விடையம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இதில் இன்று சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு,தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பாடசாலையில் பயிலும் மாணவர்கள் படிப்பதற்க்கு மிகுந்த ஏழ்மைநிலையில் இருக்கும் 40 பிள்ளைகளுக்கு கல்விக்காண பணி புரியும் இவர்கள்,பாடசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்மையால் சில    முன்னெடுப்புக்கள்  எடுக்கவுள்னர்.

அதனால் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பாடசாலையின் யேர்மன் வாழ் பழைய மாணவர்கள் இணைந்து பங்களித்து,அதற்கான முன்னெடுப்பை தொடர்வது என்றும் அதை முன் உதாரணப் படுத்தும் விதத்தில் இதில் கலங்துகொண்ட நிர்வாகத்தினினருடன் பாடசாலையின் பழைய மாணவர்கள்அங்கத்தவர்கள் ஆகி நிதி வழங்கியுள்ளார்கள்.எமது பாடசாலையின் இன்றய மாணவர்கள் ஆற்றல் உயர, கல்வி உயர, அதன்பின் அவர்கள் வாழ்வு சிறக்க, உங்கள் கரங்கள் உயரட்டும்.

அதனால் இணைந்து அனைவரும் கற்க ஆற்றல் இருந்தும் அதற்கான வசதி அற்று நிற்கும் மாணவர்களுக்கு உதவ வாருங்கள், உதவக் கரம் துாக்குவோம், இணைந்து செயலாற்றுவோம்.

யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் ஆகிய நாங்கள் இணைந்து செயலாற்றி எமது சமூகத்திற்காய் எம்மால் முடிந்ததைச்செய்ய இணைவோம்,

இணைவு எதிலும் பலம்
இணைவு உயர்வின் பலம்
படிப்பு தரும் நல்வளம்
அன்று பணம்அது இல்லாமையால்
பலர்பட்ட துன்பம் அறிந்த நாம்
பணியாய் இதைச் செய்தால்
எம்மனம் சிறிது மகிழ்வாகும்

இணைவோம் அன்றைய மாணவப்பருவத்தை சிந்தித்து செயல் புரியவாருங்கள்