((((((காலச்சக்கரம் ))))))

கண்கள் ஆறும்
கண்ணீர் ஆறாகின.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கமமும் புலமும் எங்கள்
காலத்தை நிர்ணகிக்க, நாம்
களிப்பின் எல்லையில்
காலத்தை களித்து வந்தோம் .
காலம் மாறிப் போகவே,அந்த
கடையர் கைகள் ஓங்கியன,
கடையேற வழியற்று போகவே, எம்
காளைகளுக்கும் கைகள் நீண்டது .
கடல் நடுவே அமைந்தஅந்தத்தீவில்,
கடுகளவும் அமைதி தீர்ந்தது போனது .
கட்டாந்தரையாக மாறிய நிலங்களில் ,
காணும் இடமெல்லாம்
காவல் அரண்களாய் ஆனது .
கண்ட இடத்தில் சண்டைகள் ,
காணமல் போயினர் எம் மக்கள்,
காடுகளில் தஞ்சமகினர் எம்மவர் .
கால்வாசிக்கு மேல் அகதிகள் ஆயினர் .
காலச் சக்கரப் பிடியில் சிக்கி
காளை பருவமடைந்த நானும்,
கன்னிப் பருவமடைந்த அவளும்,
கண்டு பழக வாய்ப்பும் கிட்டியது ,
கற்பாறை மனங்களில்
காதல் செடி முளைப்பது புதினமா?
காற்றுப் புகாத இடத்திலும்
காதல் புகுமென்பது புதிதா.?
கட்டுப் பாட்டுக்குகுள் தான் நாம்
கட்டுண்டு கிடந்தோம்,
கால் வயிற்ருக்கு கூட
கஞ்சி இன்றித் திரிந்தோம்,
காதல் மட்டும் எமக்குள் ஏனோ
கண்டதும் பிறந்தது,
கண்களால் பேசி
கடிதங்கள் பரிமாறியே ,
காகிதப்பூக்களாய் மலர்ந்து.
காதல் கிளிகளாய் ஆகினோம் .
கட்டுப்பாடுகளை மீறினோம்
கணவன் மனைவி போல
காதலர்களாய் வாழ்ந்தோம் .
காலத்தின் கொடுமையோ அல்லது
கண்பட்டதோ எங்கள்
காதலுக்கு ,யாரறிவர் .
காணாமல் போனோர் வரிசையில் என்
காதலியும் ஒருவரானாள், ஓர்நாள் ,
கலங்கினேன் புரண்டேன்
கத்திக் கூச்சலிட்டேன் ,
கண்டு கொள்ள யாருமின்றி
கடைசியில் மௌனமானேன் .
காலங்கள் விரைந்தன,
காட்சிகள் மாறின,
கடந்ததை மறக்க
கண்டங்களைக்
கடந்து வந்தேன் ,
கால ஓட்டத்தை
கட்டியணைத்தேன்,
கனவுகள் மறைந்து ,
கரைந்தே போனது,
காதலி என்பவள் வெறும்
காகிதத்தில் பூவானாள்.
கட்டாயத்தின் பேரில் நான்
கலியாணம் செய்ய வேண்டும் எனும்
கட்டாயம் பிறத்தது ,
கண்ணிழந்த ஒரு பெண்ணுக்கே
கணவனாகுவேன் எனும்
கட்டளையை நான் கொடுத்தேன் ,
காத்து வளர்த்தோர் தம்
கடமையை முடிக்க
கவலையோடே தேடி ,ஒரு
கட்புலனற்ற மங்கையை
கலியான மேடையில் அமர்த்தினர் ,
கட்டிய தாலியை நான் தொட்டுப் பார்கமுன்
கடிதம் ஒன்று வந்தது இடியாய் ,
காவலரணை ஒருநாள் அவள்
கடக்கும் போது தடுத்து நிறுத்தி
காட்டுக்குள் தூக்கிச் சென்ற
காவல் வீரர்கள் ,என்னவளை
கற்பழிக்க விரட்டுகையில்
கால்தவறி அவளும்
கண்ணிவெடியில் சிக்கி
கால்களை இழந்து, இன்று
காப்பகமொன்றில் இருப்பதாயும்,
கண்ணீரோடு எனக்காய்
காத்திருப்பதாயும்,
கடிதம் அனுப்பியிருந்தாள் , என்
காதலி, ஆம்என் முன்னால் காதலி???
கண்ணீரும்
கம்பலையுமாய்
காத்திருக்கும் முன்னாள்
காதலிக்கு
கால்களாக மாறுவேனா ?
கண்ணிரண்டையும் இழந்து ,என்னையே
காவலனாக நம்பி வந்தவளுக்கு
கண்களாய் இருப்பேனா ?
கனவு மாத்திரைகளோடு
கண்ணீர் யாத்திரை செய்யும்
கட்டாக்காலியானேன் நானும் இன்று ,
கண்கள் ஆறும்
கண்ணீர் ஆறகின,
காலச்சக்கரம் தன்
கடமையை செய்கிறது.
கவிரசிகப் பெருமக்களே ,என்
கண்ணீர்க் கதையை இங்கே
காவியமாக்கி உள்ளேன்
கடைசி முடிவு உங்கள்
கரங்களில் .
***
கண்ணீர் நேசன்