.அறிவாலயம் ஓபகவுசன் நகரில் 31 ஆண்டைக் கொண்டாடுகின்றது.

ஓபகௌசன் நகரில் அறிவாலயம்(1985 -2019)

1985ம் ஆண்டுதான் யேர்மனிக்கு தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்தார்கள். அக்காலகட்டத்தில் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து ஓபகவுசன் நகரில் தமிழர்கள் வாழத் தொடங்கிய போது இந்நகரின் Dorterner Str 425 இலக்க ஒரு விடுதிபோன்ற இடத்தில் குடும்பங்களைத் தங்க வைத்தார்கள். Hamburger Str,Waghals Str; Duisburger Str ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களில் இளைஞர்களைத் தங்க வைத்தார்கள்.

Dorstener Str 425 உள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய துரைசசுவாமி நந்தகுமார் என்ற இளைஞர் 1985 ஆம் ஆண்டு குடும்பங்கள் இருந்த விடுதியில் உள்ள பிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு அறையில் (Spielzimmer) பிள்ளைகளை அழைத்து அங்கு வைத்து அவர்களுக்கு தமிழ் கற்பித்தார்.

அந்த அறையின் வாசல் கதவு நிலையில் „அறிவாலயம்“ என்ற பெயரை எழுதி ஒட்டியிருந்தார். அறிவாலயம் என்ற பெயர் கொண்டு அந்த அறையில் ஆரம்பித்த மொழிகற்பித்தல் இன்று யேர்மனியில் அறிவாலயம் என்று பெயர் கொண்டு இயஙகும் அத்தனை பாடசாலைகளுக்கும் இப்பெயர் வரக்காரணமாகவிருந்தவர் துரைச்சுவாமி நந்தகுமார் எனபவரே.

ஓபகௌசன் நகரில் தமிழ்மொழி கற்பிக்கவென முதல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை அறிவாலயம் ஆகும்.

துரைச்சுவாமி நந்தகுமார் அதன் பொறுப்பாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.அப்பாடசாலை இன்று அது பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்பது கண்டு வாழ்த்தி மகிழ்ந்து பாராட்டுகின்றேன்.

இவ்வேலை இப்பாடசாலை 31 ஆண்டைக் கொண்டாடுகின்றது.அறிவாலயம் 1985 ஆண்டு துரைச்சுவாமி நந்தகுமார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டமையால் அறிவாலயம் 34 அகவை வயதை உடையது என்பதுதான் உண்மையிலும் உண்மையானதாகும்.