ஜன்னல்கள் மூடி!

கலப்படம் இன்றி
உழைப்பவன் இன்று
கண்ணீருடனே வாடுகிறான் –
நல்ல
நிலைப்பட என்றும்
வழியே இல்லை.
துயர்ப்பட வாழ்க்கையை
தேடுகிறான்.

இன்னல்கள வந்து
இடுப்பை ஒடிக்கும்
ஜன்னல்கள் மூடி
மூச்சினைத் தடுக்கும்
பின்னலாய் வாழ்க்கை
பீதியை கொடுக்கும்
அன்னத்தை தேடி
ஓடுகிறான்.

„உழைப்பினில் சிறந்தவர்
ஊருக்குள் உயர்ந்தவர்
திளைத்திடும் செல்வத்தால்
திரவியம் சேர்த்தவர் “
என்று சொல்லும்
பல பேர்கள் _ அவர்
தேடுதல் சரியில்லை
மூடிய முறைக்குள்
உழைத்திடுவார் .- அவர்
துன்பம் இன்றி
வாழ்ந்திடுவார்.

இயற்கையின் நியதியா ?
நேர்மைக்கு அவதியா ?
நெஞ்சம் கேட்டிடும்
கேள்வி இதுதான்.

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்