தீண்டும் வரை..


நிழலாய்
பூவாய் காயாய்
கனியாய்
உரமிட்டவருக்கு
மரமாய் நிமிர்ந்து
பயனாயிருந்தேன்..

அழிந்தபின்னும்
காகிதமாய்
கப்பலாய்
காதலரின்
கரங்களில்
கவிதையாய்
காவியமாய்
நீளப் பரவிய
பங்களிப்பு….

ஓரமாய்
இருந்த எனை
ஈரமாக்கிட
சுடுகலனாய்
எழுது கலன்
முட்டியது மோதியது
முத்தமிட்டது.
எண்ணங்கள்
தீரும் வரை
மோக முள்ளால்
தீண்டியது….

காயப்படடேன்
களங்கப்பட்டேன்
எதிர்ப்பில்லா
உணர்வுகளால்
மௌனம் காத்தேன்.
இன்று வேண்டா
பெண்ணாய்…
கசங்கிப் போனேன்.
எழுவேன் ஆலையில்
வீழ்தாலும்
காகிதமாக வருவேன்
அழிவென்பது
எனக்கில்லை
நம்பிக்கை ஒன்றே
என் வாழ்க்கை.

கவிஞர் ரி.தயாநிதி