தொலைந்த_வாழ்க்கை_முறைகள்

நாகரிகத்தின் உச்சமாய்
நகரத்தின் தோற்றமாய்
பழையன கழிதலும்
புதியன புகுதலுமாய்
பற்றிக்கொண்ட நவீனமுறைகளினால்
தொலைந்து போனது
எமது பாரம் பரியங்களும்
பண்டைய முறைகளும்
எத்தனை ஆரோக்கியம்
எத்தனை அழகு
எல்லாம் தொலைத்து நிற்கிறோம்
ஆளுக்கொரு திசையில்
உறவுமின்றி அன்புமின்றி
நாதியற்று நாமிங்கே
உரலில் குற்றிய அரசியின்
சுவையிழந்து நின்றோம்
அம்மியில் அரைத்த
சம்பலின் உன்னதம் இழந்தோம்
கோலம் போட்டு அழகுபார்த்த
உள்ளம் இழந்து நின்றோம்..
அன்பும் பரிவும் இழந்து நின்றோம்
அருகருகாய் உறவுகள் இருந்தும்
பேச நேரம் இல்லாது இருந்தோம்
ஐந்தறிவு ஜீவனுக்குள்ள
நன்றியும் அன்பையும்
நகரத்தில் இழந்து நின்றோம்
இளமையிலே கொடிய நோயையும்
கூடாத பண்பையும் சுமந்து
நாகரிகத்தின் உச்சமாய்
தொலைந்து போனதே எங்கள்
வாழ்க்கைமுறையும் தானே….
ஜெசுதா யோ