நல் ஆசான் ஸ்ரீ தயாளசிங்கம் அவர்கள்.

ஐரோப்பிய மண்ணில்
நாமறிந்த முதல் நாயகன்.
பரதக் கலையின் மூத்தவர்
பரதத்தோடு பண்பாட்டு விழுமியங்களையும்
கற்றுக் கொடுக்கும் குருவானவர்.

இவரது பயிற்சிக் கூடத்தில்
நுழைந்தவர் பட்டை தீட்டப்படுவர்.
நேர்த்தியும் கலை மூர்த்தியும்
நிறைந்த வல்லுனர்களாகின்றனர்.
ஆடல் கலையைக் கண்டவர்
குருவின் பெயரை கண்டறிவர்..

என் மகனை பரதக் கலையில்
செதுக்கி பண்பாட்டில் நிமிர்த்தி
சிறந்த மாணவணாகத் தந்தவர்.
உயர்ந்த எண்ணங்களை ஊட்டி
பரத உருப்படிகளோடு உருப்படியாக்கி
உலவ விட்ட நல் ஆசான்..

மலைபோல துயரங்கள் கவ்விய போதும்
நிலை குலையாமல் கலையை வளர்ப்பவர்.
தன்னை வாழ வைக்கும் பரதக்கலை
தன்னோடு நின்று விடாதிருக்க தன்
இரு புதல்விகளையும் வார்த்தெடுத்தவர்.

கலைக்கு மொழிகிடையாது எனும்
கூற்றினை பறைசாற்றும் கண்ணாடி
பன் மொழி பேசுவோரும் இவரிடம்
பரதம் பயின்று அரங்கேறுவது கண்கூடு.
இவர்களுக்கு நல் வாழ்த்தெனும்
உரமிட்டு ஊக்கம் கொடுப்பது சிறப்பாகும்.
வாருங்கள் உறவுகளே எங்கள் நாயகர்களை
நிறைவாக வாழ்த்துவோம்…வாழிய வாழியவே…..ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.