நேற்றைய நாள்…!கவிதை கவிமகன்.இ

சந்தோசமாக இருந்தேன்
கண்களுக்குள் நிறைந்த
மகிழ்வு
எப்போதும் போலில்லாமல்
புதிதாக என்னை உணர்ந்தேன்
ஏனோ இதயம் மட்டும்
படபடத்து கொள்கிறது
நேற்றைய நாளின்
சொந்தத்தை நான்
திருடிக்கொண்ட போது
இருந்த படபடப்பை விட
வித்தியாசமாகவே இருக்கிறது
லப்டப் என்று துடிக்கும்
இதயம் கூட இன்று
வேறு என்னவோ ஒலியை
எழுப்புகிறது
ஏன் என்று புரியவில்லை
காணாமல் போன காரணத்தை
தேடி அலுத்துவிட்டேன்
பார்த்தேன் ரசித்தேன்
சிரித்தேன்
மகிழ்ந்தேன் அழுதேன்
ஆனாலும்
புரியாத புதிராக
அவிழாத முடிச்சாக
எனது நேற்றைய நாள்
விரிந்து கிடந்தது
நானோ பாயில் படுத்து
வானத்தை ரசிக்கும்
மனிதனல்ல
உயரப்பறந்து சாம்பரானாலும்
மேட்டில் அருந்து உயிர்பெறும்
வலுவுள்ளவன்
போட முடியாத
முடிச்சை போட்டு
அவிழ்க்க முடியாத
சிக்கலை
அவிட்டு விட்டு அடைந்த
மகிழ்வில் அந்தரப்படும்
இதயத்துக்கு அருகில்
கரிய புள்ளி ஒன்றில்
இருந்து எழுந்த நேற்றைய
ஒலி கூட ஏதோ ஒன்றை
சொல்கிறது
எதையும் கண்டு அஞ்சாத
மனம் மகிழ்வாக
இருப்பதாக காட்டி கொள்கிறது
அதற்கு தெரியும்
நான் எப்படி என்று
நான் எப்போதும்
உயரப்பறக்க ஆசைப்படுவதை
போலவே மனதும்
வெறுமையாகினும்
முழுமையாக நிறைவாகிறது
நேற்றைய நாளைப்போல

ஆக்கம் -கவிமகன்.இ

Merken