பாடகர், இசையமைப்பாளர், மதுரக் குரலோன் கண்ணண்.பற்றி ரி.தயாநிதி அவர்கள்பார்வை !

மதுரக் குரலோன்
கண்ணண்.
யேர்மனி.
…………………………..
யாழ் நல்லூரைப் பிறப்பிடமாக் கொண்டு இன்று யேர்மனியில் இசையாகம் செய்து வரும் கண்ணண். யேர்மன் கண்ணண் மாஸ்ரர் என்றால் அறியாதவர் இருக்க மாட்டார்கள்.25 வருடங்களுக்கு மேலாக யேர்மனிய கலைபண்பாட்டுக் கழகத்தில் இசைக்கலைஞராகத் திகழ்கின்றார்.
கருனாடக சங்கீதத்தில் நாட்டம் மிகுந்தவராக ஆரம்ப காலத்தில் எங்கள் தேசத்தின் மூத்த சங்கீத மேதை சங்கீத பூசனம் பொன் சுந்தரலிங்கம் அவர்களிடம் முறைப்படி பயிலத் தொடங்கினார்..

காலப்போக்கில் மேலும் தன்னைப் புடம் போட்டுக் கொள்வதற்காக தமிழகத்தில் இசைப் பேராசிரியர் ரி வி.கோபாலகிருஸ்ணண் அவர்களிடம் தனது இசை அறிவினை மேம் படுத்திக் கொண்டார்.

பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம் திரு பரா அவர்களின் முயற்சியால் இசைப் பேழை ஒன்றினைத் தயார் செய்யும் போது கண்ணண் அழைக்கப் படுகின்றார்.பரா அண்ணணிண் இசை அமைப்பில் ஏனிந்த மௌனமோ எனும் பாடலும் மனிதன் என்றொருவன் என்ற பாடலும் ஔிப்பதிவு செய்யப் பட்டது.எதேச்சையாக நாடக ஒத்திகைக்கு சென்றிருந்த வேளை கண்ணண் எனக்கு அறிமுக மாகின்றார். சில அரங்குகளில் அவரின் கச்சேரியும் எனது நாடகங்களும் அரங்கேறின..
கண்களை மூடிக் கொண்டு கண்ணணின் பாடல்கள் டாக்டர் யேசுதாஸ்அவர்கள் பாடுவது போல பிரமை ஏற்படுத்தும்.

ஏழிசை வேந்தன்.மதுரக் குரலோன் என பல பட்டங்களும் விருதுகளும் கிடைக்கப் பெற்ற பெரும் கலைஞர் எங்களுக்கு வரம்.வகைதொகையின்றி பல.தாயகப் பாடல்களை ஈழவிடுதலைக்காகப் பாடியிருக்கின்றார்.சிறந்த இசை அமைப்பாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார்.இன்று பல மாணவர்களுக்கும் சங்கீதம் கற்றுக் கொடுத்து வருகின்றார்.

ஐரோப்பாவில் பரதநாட்டிய அரங்கேற்றங்கள் பல வற்றுக்கு பாடிக் கொண்டே இருக்கின்றார். நண்பர் ஒருவருடன் உரையாடும் போது 400 அரங்கேற்றங்களுக்கு மேல் பாடி இருக்கின்றார் எனும் சாதனைக்குரியவர் எனக் குறிப்பிடப் பட்டார். வாழ்த்துக்கள்.

இவரது மனைவி மகள் இருவருமே சிறந்த பாடகர்களாக வலம் வருவது கண்கூடு. இவரது மகள் அனுசியா தென் இந்திய திரைப் படங்கள் மெட்ரோ.உரு போன்ற வற்றில் பாடியிருப்பது தனிச் சிறப்பாகும். வாழ்துக்கள் மகள்..ஆசிரியர் கண்ணண் அவர்கள் மேலும் பல கலைஞர்களை சங்கீதத்தில் வளர்த்தெடுக்கும் பாரிய பொறுப்புக்குரியவராகின்றார்.காரணம் சினிமா மோகம் மேலிடுவதால் கர்ணாடக சங்கீதம் நம்மிடையே மருவிக் கொண்டு வருவது தென்படுகின்றது.இவரது இசைப் பணி மேலும் பிரகாசமடைய நாமும் வாழ்த்துவோம் வாருங்கள்.வாழிய வாழியவே..
10.12.2017.