லம்போதரன் மூத்தகலைஞர் தயாநிபற்றி

புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் தெரிந்த கலைஞர் நையாண்டி மேளம் புகழ் தயாநிதி தம்பையா என்னும் கலைஞனை மறக்கத்தான் முடியுமா…?
தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழும் அந்தச் சிறந்த கலைஞன் முகபாவனை, உடல்மொழி, வசன உச்சரிப்பால் ஆரம்பித்த உடனேயே ரசிகர்களை குலுங்கிக்குலுங்கி சிரிக்க வைப்பதில் வல்லவர் தயாநிதி ஐயா.
அவருக்கு ஐரோப்பா முழுவதும் ரசிகர்கள் உண்டு.கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் இடைவெளியற்ற கலைப்பயணத்திற்கு சொந்தக்காரர் தயாநிதி என்ற அற்புதமான கலைப் பொக்கிஷம்.
இன்றைய தமிழக இளம் காமடி நடிகர்களில் அனுபவத்துடன் ஒப்பிட்டால் மிகப்பெரிய அனுப வம் கொண்ட தயாநிதி ஐயா போன்றவர்களின் ஆற்றல்கள் குடத்துள் விளக்காய் மறைந்து விடக்கூடாது, குன்றின் மேல் ஏற்றிய தீபமாக மிளிர வேண்டுமல்லவா.
தயாநிதியின் அபாரத்திறமைக்கு அவர் இருக்க வேண்டிய இடம் வெகு தொலைவில் இல்லை அப்படிப்பட்ட கலைக்களஞ்சியம் என்றும் பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லா தேகாரோக்கியத்துடன் இருந்து பல கலைஞர்களை உருவாக்கி இந்த புலம்பெயர் மண்ணில் வாசம் வீச வேண்டும் என்று எல்லாம் வல்ல அளவையூர் உறையும் அருள்மிகு கும்பளாவளை விநாயகர் தாழ் பணிந்து கலைஞானியிடம் ஆசிவேண்டி சிறியேன் மகிழ்கிறேன். அவரின் மீது கொண்ட கலையன்பால் கற்பனையில் ஒளியுருவம் வரைய நெடுநாள் விருப்பு இன்றுதான் அது நிறைவுற்றது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் அளவையூர் கவிக்குமரன் கலைஞானமணி தியாகராஜா லம்போதரன்