ஒரு கிலோ தங்க கிரீடம் சூடப்பட்ட நாட்டியத் தாரகை!!

IBC- தமிழ் தொலைக்காட்சி நடாத்திய நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சலாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம் வெற்றி பெற்றார்.

நேற்று சுவிட்சலாந்து போரம் பிரைபோர்க் மண்டபத்தில் நடைபெற்ற ஐ.பீ.சி. தமிழா பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சர்வதேச நடுவர்கள் முன்நிலையில் தமது திறமைகளை நிரூபித்த ஐந்த போட்டியாளர்கள் மத்தியில் இருந்து மிதுஜா வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

IBC தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் திருமதி வைதேகி பாஸ்கரன் ஆகியோர் ஒரு கிலோ தங்கத்தினாலான கிரிடத்தை வெற்றியாளருக்கு சூடியிருந்தார்கள்.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பற்றிய மற்றய நான்கு போட்டியாளர்களுக்கும் தங்கம் பரிசுகளாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

IBC தமில் நடத்திய ஐரோப்பா ரீதியில் நடந்த நாட்டிய தாரகை நடனக்கலை போட்டி நிகழ்ச்சி சுவிஸில் நடைபெற்றது இதில் சுவிஸ்சலான்தில் வாழும் செல்வி மிதுஜா அமிர்தலின்கம் அவர்கள் 1kg தங்க கிரீடத்தை பரிசாக பெற்றுக் கொண்டார் இவர் திருக்கோணேஸ்வரா நடன அசிரியை மதிவதனி சதாகரன் அவர்களின் மாணவியாவார் அவர்களுக்கு மனமாந்த நல் வாழ்த்துக்கள்