***அஞ்சி நிற்கும் பெற்றோர்***

நெஞ்சில் சுமந்த தந்தையாரையும்,
_நல்ல கருவிலே சுமந்த தாயாரையும்
கஞ்சிக்கு வழியற்று அலையவிடும்
_கண்மூடித்தனமான காலமிதிலே,
பிஞ்சாய் இருந்தாலும், பிச்சை எடுத்தாலும்
_பிரியமனமின்றி பெற்றவரை காவியே
நெஞ்சுரத்துடன் நிலைதடுமாறாது
_நெடுந்தூரம் தூக்கிநடந்து காத்தவனே.
கொஞ்சி வளர்த்த பிள்ளைகள் தம்மை
_கொள்ளிவரை காக்குமோ ?என
அஞ்சி நிற்கும் பெற்றோருக்கு உன்
_அன்பு ஒரு ஆறுதலாக அமையட்டும்.
பஞ்சு போல பாரமற்று உள்ளதாம்
_பாசத்தோடு பெற்றவரை சுமக்கையிலே.
சுமை நேசன்.