உயிர் உடல் விருந்து…

இமை இரண்டும் அலைமோத
இடைவேளை தலை கோத
சூடாக்கித் தேகத்தில் தீக்குளித்தாய்.
பருவங்கள் தோள் சாய
பசி வந்து நான் மேய
மடி மேலே எனை வைத்து மலர் பறித்தாய்.

உதடுகளால் உதடுகளை
மொழி பெயர்த்த கவிதைகளை
பலமுறை நான் தனிமையிலே வாசித்தேன்.
விரலாலே உயிர் தீண்ட
விழி மூடிப் படி தாண்ட
உயிராலே உனை மூடிச் சுவாசித்தேன்.

வலியோடு மோதலை 
வரமாக்கும் காதலை
நிறந்தீட்டி இதயத்தில் குடி வைத்தாய்.
கலையான ஆடலை
கைசேரும் தேடலை
விழி பார்க்கத் தந்தாயே காதல் முத்தாய்.

மர்மத்தைக் குளிராக்கி
மயக்கத்தைக் குணமாக்கி
தணித்தாலே இவள் போல எது மருந்து.
சுவைக்கின்ற எண்ணத்தை
நிரப்பிய கிண்ணத்தை
தான் என்று பெயர் வைத்து தந்தால் விருந்து….

கலைப்பரிதி.