பணம் வந்தால் …..

மச்சான் நான்
நண்பன் என்று
நயமாகச் சொல்லுவார்.
மாடிமனை செல்வம்
வந்தால் – உன்னைச்
சுற்றிக் கொள்ளுவார்.
பச்சைப் பிள்ளை
போலே நின்று
பல வேலை செய்யுவார்.
இச்சை கொண்ட
நோக்கம் சொல்லி
இருப்பதையும் வெல்லுவார்.
மிச்சம் மிகுதி
ஏதும் இருந்தால்
மீட்டு எடுத்து அள்ளுவார்.
உச்சக் கட்டம்
உன்னை வைத்து
ஊரை விலை பேசுவார்.
உச்சிக் கொட்டி
உணர்ந்து கொண்டால்
உன்னையே ஏசுவார்.
சேர்த்து வச்ச
சொத்துக் குறைய
தூரத்தூர ஓடுவார்.
பார்த்துக் கொண்டால்
பார்க்காமல்
பாதி விழி மூடுவார்.
சேர்ந்து கொள்ள
இடம் பார்த்து
அடுத்தவரை நாடுவார்

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்